அஞ்சலகங்களில் டிஜிட்டல் வங்கி சேவை

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் முதல்  டிஜிட்டல் வங்கி சேவை வழங்க உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள,1 லட்சத்து 55 ஆயிரம்  தபால் நிலையங்களில் உள்ள 34 கோடி சேமிப்பு கணக்குகளை தபால் வங்கி கணக்குடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,வரும் மே மாதம் முதல் அஞ்சல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இணையம் மூலம் பணம் அனுப்புவது போன்ற வசதிகளை பெற முடியும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

அதாவது,மத்திய நிதித்துறை அமைச்சகம், தபால் நிலைய சேமிப்பு  கணக்குகளை india  post payments  bank (IPPB)  வங்கி  கணக்குகளுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த IPPB ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.இதனை பயன்படுத்தி  NEFT,RTGS மற்றும் இதர முறையிலும் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.

இதன் மூலம்,வேறு வங்கி கணக்குகளுக்கும் மிக விரைவில் பண பரிமாற்றம் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் வரும் மே மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதால் கண்டிப்பாக  மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.