dig vijay singh condemns congress
கோவா மாநிலத்தில் 17 இடங்களைக் கைப்பற்றியும் ஆட்சி அமைக்க முடியால் தோற்றுப்போனதற்கு கட்சித் தலைவர்களின் சதி வேலையே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
தனிபெரும் கட்சி
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 13 இடங்களிலும் வென்று இருந்தது.
பா.ஜனதா ஆட்சி
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்கு 3 இடங்களும், கோவா முன்னணி கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால், தனிப் பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்குள், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து, முதல்வர் மனோகர் பாரிக்கர் பெரும்பான்மையை நிரூபித்தார்.

குற்றச்சாட்டு
கோவாவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் மேல்மட்டத்தில் இருக்கும் தலைவர்களே காரணம் என கட்சிக்குள் சலசலப்ப நிலவியது.
பதில்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய சிங் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-
வில்லன் இல்லை
விஜய் சர்தேசாய் தலைமையிலான கோவா முன்னணி கட்சி, பாபுஷ் மான்செராட்டே தலைமையிலான கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருந்தேன். அவ்வாறு நடந்து இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து இருக்கும். ஆனால், இப்போது தன்னை வில்லனாக சித்தரிப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.
சதி
பாபுஷ் உடன் கூட்டணி வைத்ததன் மூலம், 5 இடங்களில் 3 இடத்தை கைப்பற்றினோம். ஆனால், கோவா முன்னணி கட்சியுடனான கூட்டணியை நமது கட்சித் தலைவர்களே சதித்திட்டம் மூலம் நாசமாக்கினர்.

நாம் கோவா முன்னணி இந்த தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்டு 3 தொகுதிகளைக் கைப்பற்றியது. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து இருந்தால், நமக்கு 22 இடங்கள் கிடைத்து இருக்கும்.
நான் குற்றவாளியா?
இதில் நான் குற்றவாளியா என்பது குறித்து நீங்களே முடிவு செய்யுங்கள், அதை உங்கள் பொறுப்புக்கு விட்டு விடுகிறேன்.
கோவாவில் சட்டமன்றத் தலைவரை தேர்வு செய்ததில் காங்கிரஸ் தாமதம் செய்ததாக குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சி உத்தரகாண்ட் , உத்தரப்பிரதேசத்தில் இன்னும் முதல்வரை முடிவு செய்யவில்லை.
விரைவாக முடிவு
தேர்தல் முடிவு வந்தபின், பஞ்சாப் மாநிலத்துக்கு 13 ந்தேதியும், மணிப்பூரில் 14-ந் தேதியும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்துவிட்டோம். மணிப்பூரில் முதல்வர் இபோபி சிங்கும், பஞ்சாபில்கேப்டன் அமரிந்தர் சிங்கை தேர்வு செய்தோம்.
கோவாவிலும் 12-ந் தேதி முதல்வரை முடிவு செய்து, ஆளுநரிடமும் கடிதத்தையும் அளித்தோம். ஆனால், ஆளுநர்தான் அதற்கு முன்பே, முடிவு எடுத்துவிட்டார்.
சரி செய்தோம்
கோவா மாநில பொருப்பாளராக நானும், செல்லக்குமாரும் 2013-ல் பொறுப்பு ஏற்கும்போது, கட்சி ஒழுங்கில்லாமல் இருந்தது. 9 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் மட்டுமே செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள், காங்கிரஸ் அமைப்பே ஒழுங்கில்லாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களே 4 இடங்களில்தான் வெல்வோம் என்று நினைத்து இருந்த நிலையில், இப்போது 17 இடங்களை கைப்பற்ற இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
