differens between vishal and former arun jetly
கடந்த சிலதினங்களுக்கு முன்பு தென்னிந்தியா நடிகர் சங்க தலைவர் விஷால் தலைமையில் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் விவசாயிகளை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்ததையடுத்து, மத்திய நிதியமைச்சர் ஜேட்லியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தனர்.

அப்பொழுது விஷால், பிரகாஷ்ராஜ் போன்றோர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன் கைகட்டி மிக பௌவ்யமாக நின்று கொண்டு தங்களின் மனுவை அளித்து விவரித்தனர். அப்போது ஜெட்லி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். அப்போது தமிழர்களை ஜேட்லி அவமதிக்கின்றார், விவசாயிகளை மதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள், அருண் ஜேட்லியை இன்று சந்திக்கையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பையளித்து இருக்கையில் அமரவைத்து பேசினார். விவசாயிகளுக்கு அளித்த இந்த மரியாதையை தற்பொழுது ''விஷாலுக்கும், விவசாயிகளுக்கும் வித்தியாசம் இதுதான்.. செயலில் காட்டிய அருண் ஜேட்லி'' என சமூகவலைதளவாசிகள் மத்தியில் பெரிதும் புகழப்படுகின்றது.
