பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதன் சர்வ தேச சந்தை விலைக்கு ஏற்ப அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. பின்னர் அது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டன.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டன.கடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டன. கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இவற்றின் விலை சற்று குறைக்கப்பட்டன...

இந்நிலையில் டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் டீசல் விலை, நேற்று லிட்டருக்கு 15 காசு உயர்ந்தது. இதன் விலை ரூ.73.23 ஆக இருந்தது. 

மும்பையில், ரூ.73.59 ஆக உயர்ந்தது. இது, இதுவரை இல்லாத அதிக விலையாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் பெட்ரோல் விலையும் நேற்று உயர்ந்தது.

ஏற்கனவே டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிப் பொருட்கள்  விலை மிகக் கடுமையான உயர்ந்தது. இந்நிலையில் மீண்டும் டீசல் விலை மிகக் கடுமையான உயர்த்தப்பட்டுள்ளதால் அரசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிப் பொருட்களின் விலை தற்போது மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.