புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக திமுக மற்​றும் பாஜக இடையே நாடாளுமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. பிஎம்-ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்​து​வது தொடர்​பாக தமிழ்​நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்​புதல் கடிதத்தை மத்​திய கல்வி அமைச்​சர் வெளி​யிட்​டுள்​ளார்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டுக்கு கல்விநிதி தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். இந்த விவகாரத்தில் திமுகவினர் அரசியல் செய்கிறார். இவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் நாகரிமற்றவர்கள் என பேசினார். இது பெரும் சர்ச்சையானது. 

இதற்கு முதல்வர் ஸ்டாலின் தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து தமிழக எம்.பி.க்கள் குறித்து நான் பேசி வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தியிருந்தால் அதை திரும்ப பெறகிறேன். மற்றபடி தேசிய கல்வி கொள்ளை பற்றி நான் பேசியதில் எந்த மாற்றமுமில்லை என்று தர்மேந்திரன் பிரதான் தெரிவித்தார். 

பு​திய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக திமுக மற்​றும் பாஜகவுக்கு இடையே கடும் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பிஎம்-ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்​து​வது தொடர்​பாக தமிழ்​நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்​புதல் கடிதத்தை தர்​மேந்​திர பிர​தான் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

Scroll to load tweet…

அதில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினர். நாடாளமன்றத்தில் நான் தவறான தகவல் தரவில்லை. திமுக எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால், உண்மை சரிந்து விழும்போது தட்டிக் கேட்பது கிடையாது. தமிழக முதலமைச்சரை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களை விட குழந்தைகளின் நலனே முக்கியம். திம.கவின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல், தமிழகத்திற்கும் அதன் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவமானம் என தெரிவித்துள்ளார்.