Sabarimala : சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி.!
Sabarimala : வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மே மாதம் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உலக பிரசித்திபெற்றது. ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் போது, கோவில் திறக்கப்பட்டு மாத பூஜை செய்வது வழக்கம். ஐயப்ப பக்தர்களுக்கு பம்பா நதியும், பதினெட்டாம் படியும், மகரவிளக்கும் மிகவும் புனிதமானவை. மலை ஏறி வரும் பக்தர்களின் பாதங்களுக்கு பக்தி உணர்வை கொடுப்பது பதினெட்டாம் படி.
இருமுடி தலையில் இருந்தால்தான் சிறப்புமிக்க பதினெட்டாம் படியில் ஏறிச்செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மே மாதம் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் 19-ந் தேதி மாத பூஜை நிறைவு பெற்றது. ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
பக்தர்கள் அனுமதி
முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !