Asianet News TamilAsianet News Tamil

மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் தேவேந்திர பட்னவிஸ் புதிய அமைச்சர்கள் பட்டியல்

மகாராஷ்டிராவில் சிவ சேனா ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து பாஜக ஆட்சி அமைகிறது. முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்கிறார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்கிறார். இன்று மாலை இவர்களது பதவியேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தேவேந்திர பட்னவிஸ் உரிமை கோரினார்.

Devendra Fadnavis will take oath as Maharashtra CM
Author
First Published Jun 30, 2022, 1:26 PM IST

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவ சேனா ஆட்சி நடத்தி வந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வந்தார். சிவ சேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டனர்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேற வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். மும்பையில் இருந்து வெளியேறி, குஜராத், அசாம் என்று மாறி இறுதியில் கோவாவுக்கு சென்றனர். இவர்களில் 16 பேரை தகுதி நீக்கம் செய்வதாக மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு; சிறையில் இருக்கும் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் வாக்களிப்பார்களா? 

இந்த நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எம்.எல்.ஏக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கவில்லை. இதையடுத்து, பெரும்பான்மையை இழந்த உத்தவ் தாக்கரே நேற்று இரவு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஏற்றுக் கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!

இதற்கிடையே பாஜக எம்.எல்.ஏக்களையும், ஆளுநரையும் சந்தித்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் ஜூலை 1ஆம் தேதி மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது இன்று மாலையே முதல்வராக பொறுப்பேற்பதாக செய்தி வெளியாகியுள்ளது. துணை முதல்வராக சிவ சேனாவில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே பதவியேற்கிறார்.

முதலில் தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்ற பின்னர், ஏக்நாத் பதவியேற்பார் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.  ஏக்நாத் ஷின்டேவுடன் சிவ சேனாவில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏக்கள் சிவ சேனா எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்படுவார்கள். 

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சிவ சேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதைதொடர்ந்து கொறடா தேர்வு இருக்கும். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அழைப்பு விடுவார். இதையடுத்தே அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். இறுதியாக ஜூலை 11ஆம் தேதி வரை ஆட்சி அமைக்கும் நடைமுறை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

மாநிலத்தில் அரசியல் நகர்வு வேகம் எடுத்து இருப்பதை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே இன்று மும்பை  திரும்பியுள்ளார். அவர் மட்டுமே மும்பை திரும்பி இருக்கும் நிலையில் மற்ற எம்.எல்.ஏக்கள் கோவாவில் தங்கியுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் பட்டியல் உத்தேசமாக இங்கு வழங்கப்பட்டுள்ளது:

தேவேந்திர பட்னவிஸ் 
சந்திரகாந்த் பட்டீல் 
சுதிர் முங்கண்டிவர் 
கிரிஷ் மகாஜன் 
ஆஷிஷ் செலார்
பிரவீன் தரேகர் 
சந்திரசேகர் பாவன்குலே 
விஜயகுமார் தேஷ்முக் 
கணேஷ் நாயக் 
ராதாகிருஷ்ண விகே பட்டீல் 
சாம்பாஜி பட்டீல் நிலன்கேகர் 
மங்கள் பிரபாத் லோதா 
சஞ்சய் குதே 
ரவீந்திர சவான் 
டாக்டர். அசோக் உகே ஆகியோருக்கு புதிய ஆட்சியில் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏக்நாத் அணியிலும் எட்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios