முன்னாள் பிரதமரும், மதசாற்பற்ற ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக இருக்கும் தேவகவுடா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேவகவுடா அறிவித்ததை தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1956-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  

1996-ல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்திய பிரதமராக பொறுப்பேற்றார். அதேபோல, 1994-1996-ம் ஆண்டுகளில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கர்நாடக மாநில முதல்வராக பதவி வகித்தவர். தற்போது இவரின் மகன் குமாரசாமி தான் கர்நாடக முதல்வராக உள்ளார். இந்நிலையில், தேவகவுடா தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாகவும், வருகின்ற 2019-ம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார்.