புதிதாக வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுகளில் கையெழுத்து போட்டால் செல்லாது என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

நாம் இதுவரை பயன்படுத்தி வந்த ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துகள், மொபைல் எண்கள், பெயர் என பல்வேறு தகவல்களை வித விதமாக கிறுக்கி வைத்துள்ளோம். பேனா எழுதுகிறதா என்று கூட பரிசோதித்து பார்த்துள்ளோம். சின்னக் குழந்தை சுவற்றில் கிறுக்குவது போல கிறுக்கி அந்த நோட்டை படாத பாடு படுத்தினோம். இவ்வளவு ஏன்? இதயம் வரைந்து அதில் அம்பு விட்டு ரூபாய் நோட்டை காதலுக்கு தூது அனுப்பினோம். அந்த ரூபாய் நோட்டுகள் ஊருக்கே நம் காதலைச் சொன்னது.

ஆனால், இப்போது வந்திருக்கும் புதிய நோட்டுகள் சின்னதாக கிறுக்கல் இருந்தால் கூட அந்த நோட்டுகள் செல்லாது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இது 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு மட்டுமல்ல 1 ரூபாய் நோட்டுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மொபைல் எண் பரிமாற்றமோ அல்லது காதல் அம்பு விடுவதோ புதிய நோட்டுகளில் வேண்டாம்.