கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து அங்கு அரசியல் நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான கோவை சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் திடீர் திருப்பமாக பெருபான்மை இல்லாத பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்காமல், பாஜக கட்சி ஆட்சியமைக்கப்பட்டது. 

இந்நிலையில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழந்தார். இதைனயடுத்து அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்கு 14, பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

  

இதனையடுத்து பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆனால் பாஜக தலைமை, பாஜக கட்சியிலிருந்து ஒருவரை முதல்வராக கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறது. டெல்லியில் இருந்த வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக கூட்டணி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பாஜக வுக்கு பெரும்பான்மை இல்லை என கூறிவந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கோவா தலைவர் சந்திரகாந்த் காவேல்கர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். யாரை ஆட்சியமைக்க உரிமை கோருவது என்பது ஆளுநர் மிருதுளா கையில் உள்ளது.  இதனால் கோவா அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.