வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் நெட்வொர்க் பிரச்சனை சரிசெய்யப்பட்டு வருவவதாகவும் வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் திணறி வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, அரியனா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தன் சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாக ட்ராயிடம் ஏர்செல் அறிவித்திருந்தது. 

ஏர்செல் நெட்வொர்க் கிடைக்காத நிலையில், வேறு நொட்வொர்க் சேவைக்கு மாறத் தொடங்கினர்.

ஏர்செல் நிறுவனத்தை ஒழித்து ஓரம்கட்டிட கார்பரேட் நிறுவனங்களின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதைதொடர்ந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அரசு வழங்கிய மானிய தொகையை தனது ஏர்டெல் பேமண்ட் வங்கியில் மாற்றி உள்ள நிலையில் இதே நிலை ஏர்டெல் நிறுவனத்திற்கும் தொடர்கிறது என செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் இன்று முழுவதும் வோடோபோன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டவாறே இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஏர்செல் நிலை வோடோபோன் நெட்வொர்க்குக்கும் தொடர்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து தற்போது வோடோபோன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் நெட்வொர்க் பிரச்சனை சரிசெய்யப்பட்டு வருவவதாகவும் தெரிவித்தது. விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது.