அழுத்தக்கார மோடியிடம் ஆஸம் மாற்றங்கள் உருவாகியுள்ளன! என்று  தேசிய அரசியலை உற்று நோக்கும் சீனியர் மோஸ்ட் விமர்சகர்களே சொல்லத் துவங்கிவிட்டனர். ஆனால் அதேவேளையில் அமித்ஷாதான் எந்த மாற்றத்துக்கும் இடம் கொடுக்காமல் இன்னமும் பழைய ‘முரட்டு மெஜாரிட்டி’ கற்பனையிலேயே கட்சிக்கு வேட்டு வைப்பதாகவும் அடிக்கோடிடுகின்றனர். 

என்ன விவகாரம்? தேசியளவில் குறிப்பாக டெல்லி வட்டாரத்தில் பி.ஜே.பி.யின் நிலவரத்தை உன்னிப்பாக அலசியதில் கிடைத்த தகவல்கள் இதோ....

* நான்காவது கட்ட தேர்தல் வரை சற்றே சோர்வாக இருந்த மோடி, அதற்கடுத்த கட்ட வாக்குப்பதிவின் ரகசிய ‘எக்ஸிட் போல்’ சர்வேவை அலசியதில், ஏக சந்தோஷமாகி இருக்கிறார். காரணம் அது பி.ஜே.பி.க்கு அதிக சாதகமாக இருக்கிறதாம். இந்த கட்டத்தில் தேர்தல் நடைபெற்ற எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமென்பதை கவனிக்க  வேண்டும். 

* ஆனாலும் 2014 போல் தனிப்பெரும்பான்மை பி.ஜே.பி.க்கு கிடைக்காது என்பது மோடிக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது. அதனால் ஹைலெவல் கமிட்டி கூட்டத்தில் சில முக்கிய, தன்னிச்சையான ஆலோசனைகளை பகிர்ந்திருக்கிறார் மோடி. 

* அதில் ‘எந்த சூழலிலும் காங்கிரஸ் ஆட்சியமைய விட்டுவிடக்கூடாது. இதற்காக, தற்போது நமது எதிர்க்கட்சிகளாய் உள்ளவர்களிடம் கூட நாம் ரிசல்டுக்கு பிறகு தாராளமாய் பேசி ஆதரவை கேட்போம் (நம் ஏஸியாநெட் இணையதளம் இது பற்றி துவக்கத்திலேயே ஒரு கட்டுரை வெளியிட்டது நினைவிருக்கலாம்.) நம் ஒரே எதிரி காங்கிரஸ்தான், ராகுல்தான்.’ என்று சொல்லியிருக்கிறார். 

* அதன் பின் ஹைலைட்டாக ‘ஆட்சியை தக்க வைப்பது ஒன்றே நமது இலக்கு. அதற்காக சின்ன சமரசங்களை செய்து கொள்வதில் தவறில்லை.  அதற்காக, துணைபிரதமர் பதவியை உருவாக்கவும் நான் தயார்.’ என்றாரம், அதன் பின் ‘பி.ஜே.பி. ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்,  அதற்கு நானே தான் பிரதமராக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. வேறு யார் வேண்டுமானாலும்...’என்று அநியாயத்துக்கு இறங்கி வந்திருக்கிறார். 

* இந்த இடத்தில் சற்றே பிரஷர் ஏறி, இடைமறித்த அமித்ஷா....’அவசியமே இல்லைஜி. உங்களை பிரதமராக்குறது மட்டும்தான் எங்க லட்சியம். அதுல சமரசம் பண்ண வாய்ப்பே இல்லை. நிச்சயம் 2014 மீண்டும் திரும்பும். அதீத மெஜாரிட்டியுடன் நீங்க பிரதமராவீங்க. தேவையில்லாமல் அடுத்த கட்சிகளை பத்தி யோசிக்கிறது, உங்களுக்கு நிகரா இன்னொரு தலைவரை நினைக்கிறது, துணை பிரதம்ர் பதவி!ன்னு சொல்லி  உங்களுக்கான அதிகாரத்தை துண்டாடுறது!’ங்கிற கதையே வேண்டாம். என்று அழுத்தம் திருத்தமாக, சற்றே ஆதங்கத்துடன் பேசிவிட்டாராம். அதன் பிறகு மோடி வேறு பேச்சு பேசவில்லையாம். அமித்ஷாவின் இந்த முரட்டு தைரியத்தால் எங்கே கட்சி இந்த முறை செங்கோட்டையை கோட்டை விட்டுடுமோ! என்று அதிர்ந்து கிடக்கிறார்களாம் பி.ஜே.பி.யின் முக்கிய நிர்வாகிகள்.