Asianet News TamilAsianet News Tamil

Manish Sisodia :ரெய்டு நடந்துச்சா இல்லையா? சிபிஐ-டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா முரண்பட்ட பேச்சு

மதுபார்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியதுள்ளது.

Deputy Delhi CM Manish Sisodia's office gets searched by the CBI
Author
First Published Jan 14, 2023, 4:57 PM IST

மது பார்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியதுள்ளது.

ஆனால் சிபிஐ தரப்பில் , மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் எந்த ரெய்டும் இன்று நடத்தவில்லை என்று கூறி மறுகிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியோ சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியதாகக் கூறுகிறது

கடவுளின் தேசத்துக்கும் இடம்! உலகளவில் 52 சுற்றுலாத் தளங்களில் கேரளா தேர்வு! New York Times கணிப்பு

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ என்னுடைய அலுவலகத்தில் இன்று சிபிஐ ரெய்டு நடத்தியது. அவர்களைவரவேற்கிறேன், எனது வீட்டிலும் ரெய்டு நடத்தினார்கள், என்னுடைய லாக்கர்களை பரிசோதித்தார்கள்.

என்னைப் பற்றி என் கிராமத்தில் விசாரி்த்துள்ளார்கள். எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனென்றால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. டெல்லி குழந்தைகளின் கல்விக்காக நேர்மையாக பணியாற்றி வருகிறோம்”எனத் தெரிவி்த்துள்ளார்

சிபிஐ தரப்பில் கூறுகையில் “ நாங்கள் சிசோடியாவீட்டில், அலுவலகத்தில் ரெய்டு ஏதும் நடத்தவில்லை. சிஆர்பி-பிரிவு 91 வழங்கப்பட்டு, எங்கள் அதிகாரிகள் சிசோடியா அலுவலகத்துக்குச் சென்று சில ஆவணங்களை பெற்று வந்தனர் இதற்கு பெயர் ரெய்டு அல்ல”எ னத் தெரிவித்துள்ளது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!திரிபுராவில் பரமவைரி காங்கிரஸ்,சிபிஎம் தேர்தலுக்காக கைகோர்ப்பு

மதுபார்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகப்புகார்கள் எழுந்தன. இதையடுத்து, டெல்லி துணைநிலைஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவின்பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ சிசோடியா வீ்ட்டில் ரெய்டு நடத்தினர். இந்த வழக்குத் தொடர்பாக சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios