Asianet News TamilAsianet News Tamil

ரூபாய் நோட்டு விவகாரம்.. தொடரும் உயிரிழப்புகள் : பிணத்தை அடக்கம் செய்ய கூட வங்கியில் நிற்கும் கொடுமை

demonetisation deaths-gv8lds
Author
First Published Nov 25, 2016, 5:29 PM IST


உத்தரப்பிரதேசம், பல்லியா நகரைச் சேர்ந்த ஒரு மூதாட்டி வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்று இருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார். .

பல்லியா நகரைச் சேர்ந்தவர் இந்திரசேனா தேவா(வயது70). இவர் நேற்று முன் தினம் நகரில் உள்ள சென்ட்ரல் வங்கிக் கிளையில் பணம் எடுக்க வரிசையில் நின்று இருந்தார். ஏறக்குறைய 3 மணிநேரம் வெயலில் இந்திரசேனா தேவி நின்று இருந்ததால், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

demonetisation deaths-gv8lds

மேலும், இந்திரசேனா தேவியின் உடலை அடக்கம் செய்ய அவரின் குடும்பத்தாரிடம் போதுமான பணமும் கைவசம் இல்லை. இதனால், அவரின் உடலை வீட்டில் வைத்துவிட்டு, இந்திரசேனாவின் மருமகள், தனது அத்தை மரணமடைந்த வங்கியின் வாசலில் பணத்துக்காக வரிசையில் நின்றார் என குடும்பத்தார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் பல்லியா மாவட்ட போலீஸ் சூப்பிரென்டு வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.

demonetisation deaths-gv8lds

தூக்குப்போட்டு தற்கொலை

மத்தியப்பிரதேசம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஆனந்த முகுத் பாபத்(வயது58). ஸ்டேட் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆனந்த முகுத் சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவரிடம் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் ஏராளமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் அந்த பணத்தை மாற்ற முடியாமல் பெரும் மன உளைச்சலில் ஆனந்த் முகுந்த் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று அவரின் வீட்டில் ஆனந்த் முகுந்த் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios