டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளதையடுத்து, குர்காமில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அனைவரும் முகமூடி அணிந்தபடி பள்ளிக்கு வருகின்றனர்.
டெல்லியில் அண்மைக் காலமாக காற்றில் மாசுபாடு பெருமளவு அதிகரித்துள்ளது. வாகனங்கள் வெளிவிடும் புகை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து வெளியான புகை ஆகியவற்றால் காற்று மேலும் மாசடைந்துள்ளது.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக குர்காமில் உள்ள பள்ளி ஒன்று, மாணவ, மாணவிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளிக் குழந்தைகள் அனைவரும் முகக் கவசம் அணிந்தவாறு பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
