மன்மோகன் சிங் மரணத்துக்கு காரணம் என்ன? உயிர் பிரிந்தது எப்போது? வெளியான எய்ம்ஸ் அறிக்கை!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமான நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Delhi's AIIMS Hospital has released a report on the cause of Manmohan Singh's death ray

மன்மோகன் சிங் காலமானார் 

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மன்மோகன் சிங், பொருளாதார நிபுணராக சிறந்து விளங்கியவர். நாட்டின் முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்கள் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தான் மேற்கொள்ளப்பட்டன. சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்த மன்மோகன் சிங் மரணம் அடைந்தது நாட்டுக்கே பேரிழப்பாகும்.

மரணத்துக்கு காரணம் என்ன?

இந்நிலையில், மன்மோகன் சிங் மரணத்துக்கு காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில்,'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை ஆழ்ந்த சோகத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம். அவர் வயோதிகம் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று (அதாவது நேற்று) தனது இல்லத்தில் இருந்தபோது மன்மோகன் சிங் திடீரென சுயநினைவை இழந்தார். அப்போது அவருக்கு அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் இரவு 8:06 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எவ்வளவோ சிகிச்சை மேற்கொண்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை. 9:51 மணிக்கு மன்மோகன் சிங் உயிரிழந்தார்''என்று கூறப்பட்டுள்ளது.

துக்கத்தில் மூழ்கிய இந்தியா 

மன்மோகன் சிங் மறைவால் நாடே துக்கத்தில் மூழ்கியுள்ளது. நாட்டின் பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பொருளாதார நிபுணர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செயப்பட்டுள்ளன. மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios