நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட ஹெட் கான்ஸ்டபிள் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி ஜோத்பூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். நேற்று இரவு ராம்அவ்தார், ரோந்து பணியில் ஈடுபட்டார். ஜோத் பகுதியில் ரோந்து சென்றபோது, மர்மநபர்கள் சிலர், சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தனர்.

இதை பார்த்த ராம்அவ்தார், அவர்களை அழைத்தார். ஆனால், அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால், சந்தேகம் அதிகரித்த அவர், அவர்களை பைக்கில் விரட்டி சென்று, மடக்கி பிடித்தார். அப்போது, அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவர்கள், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, ஹெட் கான்ஸ்டபில ராம்அவதாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 

நள்ளிரவில் துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்துவெளியே வந்தனர். அதை பார்த்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நள்ளிரவில் ஹெட் கான்ஸ்டபிள் ராம் அவ்தார், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.