காணாமல் போய் 22 வருஷம் ஆகிருச்சு... சாமியாராக மாறி தாயிடம் பிச்சை கேட்டு வந்த மகன்!
பிங்குவின் தந்தை, தனது மகனை வசியம் செய்து வைத்திருக்கும் மதப் பிரிவினர் அவரை விடுவிக்க ரூ.11 லட்சம் கேட்பதாக குற்றம் சாட்டினார். "என்னுடைய பாக்கெட்டில் 11 ரூபாய்கூட இல்லை. நான் எப்படி 11 லட்சம் ரூபாய் கொடுக்க முடியும்?" என்று பிங்குவின் தந்தை ஆதங்கப்படுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன மகன் மர்மமான முறையில் திரும்பி வந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை ஆச்சரியத்தில் உலுக்கியுள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான 11 வயது சிறுவன், தனது தாயிடம் பிச்சை கேட்டு துறவியாக திரும்பி வந்துள்ளார்.
தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஒரு சந்நியாசி போல உடை அணிந்து, சாரங்கி என்ற பாரம்பரிய இசைக்கருவியான வாசித்து, பாடிக்கொண்டே தனது தாயிடம் பிச்சை கேட்கும் காட்சி வீடியோவில் உள்ளது.
நாட்டுப்புறக் கதைகளின் மையப் பாத்திரமான மன்னர் பரதாரி குறித்தும் இதேபோன்ற கதை கூறப்பட்டு வருகிறது. அந்த பரதாரியைப் பற்றி நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிச்சை கேட்கிறார். மன்னர் பரதாரி எப்படி ஒரு வளமான ராஜ்யத்தை விட்டு துறவியாக மாறினார் என்று பாடல் விவரிக்கிறது.
ஒயிட் பேப்பர் என்றால் என்ன? மத்திய அரசு வெள்ளை அறிக்கையின் வரலாறும் பின்னணியும்
நீண்ட காலமாகப் பிரிந்து இருந்த மகன் மீண்டும் வந்து பிச்சை கேட்டுப் பாடுவதைக் கண்ட தாய் மனம் உருகி அழுவதையும் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் காணமுடிகிறது.
தற்போதைய வழக்கில், ரதிபால் சிங்கின் மகன் பிங்கு, 2002ஆம் ஆண்டு தனது 11 வயதில் மார்பிள்ஸ் விளையாடுவதில் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டெல்லியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது தாயார் பானுமதி அவரைத் திட்டினார்.
ஆத்திரத்தில் பிங்கு இருபதாண்டுகளுக்கும் மேலாக குடும்பத்திலிருந்து ஒதுக்கி ஊர் ஊராகச் சுற்றித் திரிந்துள்ளார். கடந்த வாரம், நீண்ட காலம் கழித்து, தொலைந்து போயிருந்த பிங்கு துறவியாக தனது ஊருக்குத் திரும்பியுள்ளார். அவரைக் கண்டு அமேதியில் உள்ள கரௌலி கிராமமே திகைத்துப் போனது. உடனடியாக டெல்லியில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
ரூ.29 க்கு மத்திய அரசின் பாரத் அரிசி! 5 கிலோ, 10 கிலோ மூட்டைகளில் கிடைக்குது!
பெற்றோர் வந்து பார்த்தபோது, பிங்குவின் உடலில் தழும்பு இருந்ததை வைத்து தங்கள் மகன்தான் என்று அடையாளம் கண்டுகொண்டனர். இருப்பினும், பிங்கு மீண்டும் குடும்பத்துடன் இணைந்திருந்தது குறுகிய காலமாகவே இருந்தது. பிங்கு தனது தாயிடமிருந்து பிச்சை எடுத்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார். குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகளின் கெஞ்சலையும் பொருட்படுத்தாமல், மீண்டும் ஊரை விட்டுப் போய்விட்டார்.
தான் திரும்ப வந்தது குடும்ப உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வதற்காக அல்ல என்றும் மதச் சடங்குகளுக்காகவே வந்திருப்பதாகவும் பிங்கு கூறினார். துறவிகள் தங்கள் தாயிடமிருந்து பிச்சை பெறும் சடங்கை முடிக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார். இந்த அடையாளச் செயல் துறவற வாழ்வின் மாற்றத்தைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
பிங்குவின் தந்தை, தனது மகனை வசியம் செய்து வைத்திருக்கும் மதப் பிரிவினர் அவரை விடுவிக்க ரூ.11 லட்சம் கேட்பதாக குற்றம் சாட்டினார். "என்னுடைய பாக்கெட்டில் 11 ரூபாய்கூட இல்லை. நான் எப்படி 11 லட்சம் ரூபாய் கொடுக்க முடியும்?" என்று பிங்குவின் தந்தை ஆதங்கப்படுகிறார்.
இந்தச் சம்பவம் 1920ஆம் ஆண்டு நடந்த பவால் வழக்கை நினைவூட்டுவதாக உள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட பவாலின் ராமேந்திர நாராயண் ராயின் மறுபிறவி என்று கூறிக்கொண்டு ஒரு துறவி வந்தது நீண்ட சட்டப் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
ப்ளீஸ் காப்பாத்துங்க... அமெரிக்காவில் முகத்தில் வழியும் ரத்தத்துடன் உதவி கேட்கும் இந்திய மாணவர்!