டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளுக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரை அடுத்து, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அந்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று மாணவ - மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த
ஆர்ப்பாட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவிகள் கூறினர். மேலும், போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

மாணவிகளின் புகாரின் அடிப்படையில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியரோ, இது பொய் குற்றச்சாட்டு என்று கூறி மாணவிகள் மீது புகார் கொடுத்துள்ளார். 

ஆசிரியர் மற்றும் மாணவிகளின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், ஆசிரியரை காவல் துறைக்கு அழைத்து வந்து உரிய விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.