வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரண உதவி: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்க்கு அரசு வழங்கும் 10,000 ரூபாய் நிதியுதவி கைகொடுக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
யமுனை கரையோரத்தில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளதாகவும், சிலர் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பங்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும், வெள்ளத்தில் இருந்து மீள்வதற்கும் அரசு வழங்கும் நிதியுதவி உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அபாய நிலையிலேயே நீடிக்கிறது. ஞாயிறு காலை நிலவரப்படி யமுனை ஆற்றில் 206 மீட்டராக இருந்தது.
சகோதரிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை! ம.பி. பாஜக தலைவரின் மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு!
சில பகுதிகளில் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் வடிந்து போக்குவரத்து சீரடைந்துவிட்டபோதும், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இச்சூழலில் டெல்லி அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது.
முன்னதாக, ஹரியானாவில் உள்ள தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு நீரை யமுனை ஆற்றில் திறந்துவிட்டதுதான் டெல்லியில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதனை ஹரியானாவில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் மனோகர் லால் கட்டார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐடிஓ தடுப்பணையில் வண்டல் அடைப்பு காரணமாக வெள்ள நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள டெல்லி முதல்வர், ஐடிஓ தடுப்பணை பராமரிப்புக்காக ஹரியானா அரசுக்கு மத்திய அரசு நிறுவனமான என்டிபிசி (NTPC) பணம் கொடுத்துவந்ததாகக் கூறினார். இதனை மறுத்துள்ள என்டிபிசி நிர்வாகம், ஐடிஓ தடுப்பணை பராமரிப்பில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
திருப்பதி கோயிலுக்கு தங்கத்தில் அபிஷேக சங்கு வழங்கிய சுதா - நாராயணமூர்த்தி தம்பதி