பைக் டாக்சி சேவைகளுக்கு தடை... மீறினால் ரூ.10,000 வரை அபராதம்... அரசு அதிரடி உத்தரவு!!

பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளது. 

delhi govt banned bike taxi services

பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளது. நாடு முழுவடும் சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற பெரும் நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. டாக்சி சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ரேபிடோ, ஓலா, உபர் போன்றவை  ஆட்டோ, கார் டாக்சி சேவைகளை வழங்கி வந்த நிலையில் சமீபமாக பைக் டாக்சி சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவை விலை குறைவாகவும் எளிதாக ஒரு இடத்திற்கு செல்ல ஏதுவாக இருப்பதாலும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.

இதையும் படிங்க: இந்தியா-ஆஸி.டெஸ்ட்| அகமதாபாத் போட்டியை ஆஸ்திரேலியப் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி

இதனால் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் முறையான உரிமம் இன்றி, சாலை விதிகளை மதிக்காமல் பலர் பைக் டாக்ஸி சேவையில் பணிபுரிந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: துருக்கி மட்டுமா..! உதவி செய்வது இந்தியாவின் கடமை - மீட்புப்பணியில் ஈடுபட்ட குழுவிடம் பேசிய பிரதமர் மோடி !!

மேலும் தடையை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios