இந்தியாவில் பல மாநிலங்களில் புதிய கோவிட் 19 அதிகரித்து வருவதை தொடர்ந்து படுக்கைகள், ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Delhi Government Issues Covid 19 Advisory Orders on Hospitals : உலகின் சில நாடுகளில் புதிய கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியான சில நாட்களிலே இந்தியாவிலும் அது படிப்படியாக மீண்டும் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமீபத்தில் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக டெல்லியில் 23 பேருக்கு பாதிப்பு உறுதியானது. எனவே டெல்லி அரசாங்கம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் படுக்கைகள் ஆக்ஸிஜன் மருந்துகள் மற்றும் தடுப்பூசி கிடைப்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசானவை தான், கடுமையான அறிகுறிகள் ஏதுமில்லை. மேலும் இதுவரை யாரும் உயிர் இழக்கவில்லை.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், டெல்லியில் 23 பேர் புதிய கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்டோர் டெல்லியில் வசிப்பவரா அல்லது வெளியூரிலிருந்து வந்தவரா என்று அரசாங்கம் சரிபார்த்து வருகிறது. மேலும் எந்த சூழ்நிலையையும் முழுமையாக சமாளிக்க டெல்லி அரசு தயார் நிலையில் உள்ளது. எனவே யாரும் பீதி அடைய வேண்டாம் . மேலும் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குழுக்களுடன் நாங்கள் ஏற்கனவே ஒருங்கிணைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

படுக்கைகள், ஆக்சிஜன், பிற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள், பை-பிஏபி, ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மற்றும் முகமூடி அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் உட்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது.

இந்தியாவில் பதிவாகியுள்ள கோவிட் வழக்குகள்:

- குஜராத்தில் புதிய கொரோனா தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஹரியானாவில் 3 பாதிப்பு பதிவாகியுள்ளது.

- கேரளாவில் 182 கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

- மே 21 அன்று கர்நாடகாவில் 16 கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளதாக கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உறுதி செய்தார்.

- மகாராஷ்டிராவில் 56 தமிழ்நாட்டில் 66 பேருக்கு கோவிட் பதிவாகியுள்ளன.