டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. பா.ஜ.க தேசிய அளவில் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு இந்த டெல்லி தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி (ஆப்) சிறிது நேரம் போராடிய போதிலும், பின்னர் பின்தங்கியது. இது பெரும்பான்மைக்குத் தேவையான 36 இடங்களை விட மிகவும் குறைவு. அதே நேரத்தில், காங்கிரஸ் (ஐ.என்.சி) கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் டெல்லியில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த தேசிய தலைநகரில் அக்கட்சி தற்போது துடைத்தெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும், நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சியைப் கிண்டல் செய்து வருகின்றனர். இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களும் பரப்பப்பட்டு வருகிறது.
மண்ணை கவ்விய அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா.. ஆம் ஆத்மியை துரத்தும் சோகம்
ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பா.ஜ.க வெற்றி பெற்ற பிறகு, டெல்லியிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பது அக்கட்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த வெற்றிகள் உதவும் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
டெல்லி தேர்தல்: தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் 'டக்' அவுட்! பெரும் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
இந்த ஆண்டு இறுதியில் பீகாரிலும், அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்திலும் முக்கியமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் பா.ஜ.க வெற்றி பெற்றதை எதிர்க்கட்சிக் கூட்டணி ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. மறுபுறம், தேசிய அளவில் மீண்டும் எழுச்சி பெற, பல்வேறு மாநிலங்களில் மீண்டும் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய காங்கிரஸ் கட்சிக்கு அது உடனடியாக சாத்தியமா என்பது கேள்விக்குறி தான் என்பதே அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது.
