போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் தாக்கியதில் 7 போலீஸார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் வாகனங்களையும் மருத்துவர்கள் அடித்து நொறுக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் தாக்கியதில் 7 போலீஸார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் வாகனங்களையும் மருத்துவர்கள் அடித்து நொறுக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வை நடத்தக்கோரி டெல்லியில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மௌலானாஆசாத்மருத்துவக் கல்லூரியில்இருந்துஉச்சநீதிமன்றத்தைநோக்கிபேரணியாகசென்றனர். அப்போதுஅங்குவந்தகாவல் துறையினர்பேரணியாகசென்ற மருத்துவர்களை தடுத்து நிறுத்தியதோடு, அவர்கள் அனைவரையும்கலைந்துசெல்லும்படிகூறினர். ஆனால் காவல் துறை பேச்சைக் கேட்காத பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முற்பட்டனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சற்று நேரத்தில் இருசாராரும் கைகலப்பில் ஈடுபட்டதால் அந்த இடமே வன்முறைக் களமாக மாறியது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பயிற்சி மருத்துவர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது மருத்துவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பயிற்சி மருத்துவர்கள் தாக்கியதில் 7 போலீஸார் காயம் அடைந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் வாகனங்களையும் மருத்துவர்கள் அடித்து நொறுக்கியதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பொதுச் சொத்துகளை சூறையாடுதல், காவல் துறையை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.
இதனிடையே பயிற்சி மருத்துவர்கள் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மருத்துவர்களை தாக்கியதற்காக அரசும், காவல் துறையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுனர். டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுமார் 4000 மருத்துவர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். ஒமைக்ரான் அச்சுறுத்தலால் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நேற்றிரவு ஊரடங்கு நேரம் தொடங்கியதும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் டெல்லி போலீஸை கண்டித்து இன்றும் போராட்டம் நடைபெறும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது காவல் துறை அத்துமீறி தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவர்க்ள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும், நாளை காலை 8 மணிமுதல்அனைத்துசுகாதாரநலசேவைகளில்இருந்துபோராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மருத்துவக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதேபோல் பயிற்சி மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல் துரை மன்னிப்பு கேட்காவிட்டால் நாளை முதல் அவசர சிகிச்சைகளை தவிர மற்ற பணிகளை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலோடு, ஒமிக்ரான் வகை தொற்றுப் பரவலும் அதிகரித்து வருகிறது. அதிலும் டெல்லியில் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மருத்த்வர்கள் அறிவித்துள்ளதால் கொரோனா நோயாளிகள் பாதிகப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
