டெல்லி மதுபான ஊழல் : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்த சிபிஐ
மதுபான கொள்கை முறைகேட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். துணை முதல்வராக மணிஷ் சிசோடியாக உள்ளார்.
கடந்த 2021 நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தது. ஆளுநர் வி.கே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆம்ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கயை திரும்ப பெற்றது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர். மேலும் விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 23ம் தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது. மணீஷ் சிசோடியாவை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
அதை ஏற்று ஆஜராக போவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்