அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் நீட்டிப்பு வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் நீட்டிப்பு வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 10ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. முதல்வருக்கான பணிகளை கெஜ்ரிவால் செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறு உத்தரவிட்டது.
இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: சுவாரஸ்ய தகவல்கள்!
இதனிடையே, தன்னுடைய இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு கோரிய கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட மறுப்பு தெரிவித்துடன், விசாரணை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்படி கூறி கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தது.
இதையடுத்து, தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க விசாரணை நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவல் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, சரணடைந்த கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.