காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.
காவிரி பிரச்சனை தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது
இந்த நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,மாநிலங்களவை எம்.பி. இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
டெல்லி சென்ற இவர்கள் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்து , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
