இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன். கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அமைச்சரவை இன்று 3-வது முறையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேருக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிதித்துறையின் இணை அமைச்சராகியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

நிதி மற்றும் பாதுகாப்பு என்று மத்திய அமைச்சரவையின் முக்கியமான இரண்டு துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.