மீண்டும் இந்தியாவை அலறவிடும் கொரோனா.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

Defence Minister Rajnath Singh tests positive

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து  வீட்டில் தனிமைப்படுதிக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதில், சினிமா பிரபலங்கள்,  முக்கிய அரசியல் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததை அடுத்து கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்பி இருந்தனர். 

Defence Minister Rajnath Singh tests positive

இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 12,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Defence Minister Rajnath Singh tests positive

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்திய விமானப்படை தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொள்ள ராஜ்நாத்சிங் திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா உறுதியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios