உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயரை, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஜே.எஸ். கேஹர் பதவிக் காலம், அடுத்த மாதம் 27-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை நியமனம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என, தற்போதைய தலைமை நீதிபதி கேஹரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அதற்கு அவர் தீபக் மிஸ்ரா பெயரை பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது 63 வயதாகும் தீபக் மிஸ்ரா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் பதவி வகிப்பார்.