Death sentence of 11 people reduced life imprisonment

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ம் தேதி ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இது தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 11 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. 20 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.