உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர். தவிர 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 76 பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.12.5 லட்சம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹானும் அறிவித்துள்ளனர்.
இந்த வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.
