பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது விளையாட்டாக நண்பர்கள் ஒன்று கூடி அடித்ததில் ஒரு மாணவர் இருந்துள்ள சம்பவம், இரண்டு மாதங்களுக்கு பின் தற்போது வெளியாகியுள்ளது.

ஐ.எம்.எம். கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஒரு மாணவனுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள், கொண்டாட்டத்தின் குஷியில், பிறந்த நாள் மாணவனை கீழே தள்ளி விளையாட்டிற்காக உடலின் அணைத்து பாகங்களிலும் சரமாரியாக அடித்துள்ளனர்.

கீழே விழுந்து கிடந்த மாணவனை பின், தூக்கியபோது... அவர் கடுமையான வயிறு வழியில் அவஸ்தை பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவன், சிகிச்சை பலன் இன்றி, உயிர் இழந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.