Dancing with the Karnataka MLA

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. அம்பரீஷ் கலந்து கொள்ளாமல் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பரீஷ் கலந்து கொண்டு நடனமாடும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம், பெல்காம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்பரீஷ். தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ. அம்பரீஷ், சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல், நேற்று சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் எம்.எல்.ஏ. அம்பரீஷ் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் அம்பரீஷ் குறித்து மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கூறும்போது அம்பரீஷ் வேறுவிதமான அரசியல்வாதி என்றும் இதனைப் பொருட்படுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளார். அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 14 கூட்டத்தொடர்கள் என மொத்தம் 218 நாட்கள் சட்டசபை கூடியுள்ளது. ஆனால் எம்.எல்.ஏ. அம்பரீஷ் வெறும் 4 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். 

சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்போது அதில் பங்கேற்காமல், இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.