திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமா சீனாவில் இருந்து இந்தியாவின் தர்மசாலாவில் குடியேறி 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். இதற்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டார்.
இதையும் படிங்க: Video: பந்திப்பூர் ஜீப் சவாரி முதல் முதுமலை ஆஸ்கர் தம்பதி சந்திப்பு வரை - பிரதமர் மோடியின் பயண வீடியோ\

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து வெளியான வீடியோவில், திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவனின் உதடுகளில் முத்தம் கொடுப்பதைக் காணலாம்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியின் வெளிநாட்டு தொடர்பு! அம்பலப்படுத்தும் குலாம் நபி ஆசாத்!

மேலும் அவர் தன் நாக்கில் முத்தமிட சொல்லி நாக்கை வெளியே நீட்டுவதையும் காணலாம். இந்த வீடியோ வெளியானதை அடுத்து தலாய் லாமாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வது சட்டவிரோத செயல். மேலும் இந்த குற்றச்செயல் செய்தவரின் மீது போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
