கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா மாவட்டம் சிந்தாமணி அருகே, 2 டிரக்குகளில் ஏற்றப்பட்டிருந்த 900 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியது. இச்சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று காலை 2 அடுக்குகளாக 2 டிரக்குகளில் சுமார் 900 எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றப்பட்டது. அவற்றை மற்றொரு பகுதியில் உள்ள குடோனில் பாதுகாக்கப்பட்டு, வீடுகளுக்கு வினியோகம் செய்ய இருந்தது.

அப்போது, டிரக்குகளில் ஏற்றப்பட்டு இருந்த சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறின. இதனால், அப்பகுதியில் பெரும் குண்டு வெடிக்கும் சம்பவம் போல் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓடி சென்றனர். இதையொட்டி அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு சிலிண்டர் ஏற்றப்பட்ட வாகனத்தின் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது தெரிந்தது.