ரெமல் புயல்.. 26-ம் தேதி மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்கும்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவாக உள்ள ரெமல் புயல் தீவிர புயலாக மாறி நாளை மறு தினம், வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Remal to reach West Bengal, Bangladesh coasts by Sunday evening, says IMD Rya

கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிம்மதி கிடைத்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் நேற்று முன் தினம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி புயலாக உருவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ரெமல் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்!

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாக உள்ள ரெமல் புயல் தீவிர புயலாக மாறி நாளை மறு தினம், வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை மணிக்கு 102 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா, மிசோரம், திரிபுரா மற்றும் தெற்கு மணிப்பூர் ஆகிய கடலோர பகுதிகளிலும் மே 26-27 தேதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மே 27 ஆம் தேதி வரை வங்கக்கடலுக்கு செல்ல வேண்டும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை மையத்தின் மூத்த விஞ்ஞானி பேசிய போது “ கடல் மேற்பரப்பின் அதிக வெப்பநிலை அதிக ஈரப்பதத்தை குறிக்கிறது, இது தீவிர புயல் உருவாக சாதக மாற்றத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார். 1880 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து கடந்த 30 ஆண்டுகளில் அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை காணப்பட்டது என்றும் அவர் கூறினார். 

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் மாதவன் ராஜீவன் இதுகுறித்து பேசிய போது “ கடல் மேற்பரப்பு வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒரு புயலாக மாறுவதற்கு அதிக வெப்பநிலை தேவை. வங்கக் கடலில் தற்போது கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் தற்போது மிகவும் வெப்பமாக உள்ளது, எனவே வெப்பமண்டல புயல்கள் எளிதில் உருவாகலாம்.

RAIN : ஊட்டி, குன்னூரில் கொட்டும் மழை... முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை- மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆனால் வெப்பமண்டல புயல்களால் கடலால் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை; வளிமண்டலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, காற்றின் வேகம் மற்றும் அல்லது உயரத்துடன் காற்றின் திசையில் மாற்றம் இருந்தால் ஒரு புயல் தீவிரமடையாது. அது வலுவிழந்துவிடும்," என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios