பேரழிவை ஏற்படுத்திய பிபர்ஜாய் புயல்.. ராஜஸ்தானில் 8 பேர் உயிரிழப்பு, 17,000 பேர் இடம்பெயர்ந்தனர்..

பிபர்ஜோய் புயல் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 17,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Cyclone Bibarjoy caused disaster.. 8 people died in Rajasthan, 17,000 people were displaced..

'பிபர்ஜோய்' புயல் காரணமாக ஏற்பட்ட, கனமழையால் ராஜஸ்தானில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். புயல் படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஜலோர், சிரோஹி மற்றும் பார்மர் மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் அசோக் கெலாட் வான்வழி ஆய்வு நடத்தினார். 

பல மாவட்டங்களில் 'கனமழை' முதல் 'அதிக கனமான' மழை பெய்து வருவதால், மோசமான வானிலை காரணமாக உயிர் மற்றும் உடைமை இழப்புகளைக் குறைக்க மீட்புப் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி உள்ளனர். தோல்பூர் மற்றும் அஜ்மீரில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அஜ்மீரில் உள்ள அனா சாகர் ஏரி நிரம்பியது.

மணிப்பூரில் வன்முறைக்கு யார் காரணம்? மெய்தி இன மக்களின் நீண்ட அறிக்கை என்ன கூறுகிறது?

முதல்வர் அசோக் கெலாட் ஆய்வு

தீவிர மழை நடவடிக்கைகளுக்கு மத்தியில் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கெலாட், தனது ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய போது “ பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 15,000 முதல் 17,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 2,000 மின் மாற்றிகள் மற்றும் பல சாலைகள் சேதமடைந்துள்ளது.

மழையின் காரணமாக ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். எத்தகைய பேரிடர் வந்தாலும், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக நாங்கள் ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

இதனிடையே மாநில பேரிடர் ஆணையத்தின் 17 குழுக்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 8 குழுக்களும் மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 60 ஆண்டுகளில் குஜராத்தைத் தாக்கிய மூன்றாவது புயல் பிபர்ஜோய் புயலாகும். இந்த புயல் கடந்த வியாழன் கிழமை மாலை 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' கடலோர மாநிலத்தில் கரையைக் கடந்தது. இது ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராஜஸ்தானில் நுழைந்தால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை முதல், கனமழையின் வேகம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், ஜூன் 24 முதல் 25 வரை, கிழக்கு ராஜஸ்தானில் மீண்டும் மழை அதிகரிக்கும் என்று வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்கள் ரத்து

புயல் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ராஜஸ்தானில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஜோத்பூர்-பில்டி எக்ஸ்பிரஸ் (04841), பில்டி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் (04842), ஜோத்பூர்-பாலன்பூர் எக்ஸ்பிரஸ் (14893) மற்றும் புதன்கிழமை பாலன்பூர்- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் (14894) உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வடமேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கேதர்நாத் கோயில் கருவறையில் பணம் வீசிய பெண்; எப்ஐஆர் பதிவு செய்த போலீசார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios