இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு  உத்தரவு இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என ஆய்வு நிறுவனம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தாமாக உயிரிழப்பு 59 ஆயிரத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து வேகமாக முன்னேறுகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவை விட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவுகிறது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 277,161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,392 ஆக உள்ளது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? என்கிற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து  அமெரிக்காவை சேர்ந்த பாஸ்டன் என்கிர ஆய்வு நிறுவனம், ‘இந்தியாவில் ஏப்ரல் 14 ம் தேதி வரை போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தவு நீட்டிக்கப்படலாம். அதாவது ஜூன் அல்லது செப்டம்பர் மாத இடை வரை தொடரலாம். இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் முன்பை விட நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால்  ஜூன் மாதத்தின் இடைவெளியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என கருதப்படுகிறது.