குஜராத் மாநிலம் பத்ரா தாலுகாவில் உள்ள சோக்தரகு கிராமத்தில் மனித உடலை கடித்தவாறு முதலை ஒன்று ஆற்றில் நீந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலம் பத்ரா தாலுகாவில் உள்ள சோக்தரகு கிராமத்தில் மனித உடலை கடித்தவாறு முதலை ஒன்று ஆற்றில் நீந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பத்ரா வதோதரா நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பத்ரா நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிராமத்தின் அருகே ஓடும் ஆற்றில் பத்ரா தாலுகாவில் உள்ள சோக்தரகு கிராமத்தில் வசிப்பவர்கள் முதலையை கண்டுள்ளனர். மேலும் அந்த முதலமை ஒரு மனித உடலை கடித்தப்படி ஆற்றில் நீந்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்சார சட்டத்திருத்த மசோதா அறிமுகம்: மக்களவையில் காரசார வாக்குவாதம்

இதை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நூற்றுக்கணக்கானோர் ஆற்றின் கரையில் திரண்டனர். மேலும் இதுக்குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் இருந்த மனித உடல், 30 வயதான இம்ரான் திவான் என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபரை மக்கள் முதலையிடம் இருந்து மீட்க முயற்சித்த போது முதலை ஆழமான நீரில் மறைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BJP JDU Alliance update சூடுபிடிக்கும் பிஹார் அரசியல்!பாஜக-வை கைகழுவுங்க:நிதிஷ் குமார்-க்கு லாலு கட்சி அழைப்பு

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுக்குறித்து இம்ரானின் சகோதரர் கூறுகையில், இம்ரான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு தர்காவிற்குச் சென்றிருந்தார். அவர் தர்காவின் பாரபெட்டிலிருந்து தவறி ஆற்றில் விழுந்திருப்பார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். ஏற்கனவே இந்த ஆண்டு ஜூன் மாதம், வதோதரா நகரில் விஸ்வாமித்ரி ஆற்றில் மூன்று முதலைகள் ஒரு மனிதனின் உடலைக் கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
