crisis in pak border

மும்பை -கராச்சி விமான சேவையை மே 11ம் தேதி முதல் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

மும்பையில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சிக்கு வாரத்தில் ஒரு நாள் விமானம் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 11ம் தேதியில் இருந்து வாரம் ஒருநாள் இயக்கப்படும் சர்வதேச விமனத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதையொட்டி 11ம் தேதிக்கு பிறகு, இந்த விமானத்துக்கான முன்பதிவு இதுவரை செய்யவில்லை.

விமான சேவை நிறுத்தப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது இந்தியா -பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் அல்லது வணிக ரீதியில் இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மும்பை - கராச்சி செல்லும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடவில்லை.