சத்தீஸ்கர் அரசு வரும் 28ம் தேதி முதல் பசுவின் சிறுநீரான கோமியத்தை லிட்டர் 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

சத்தீஸ்கர் அரசு வரும் 28ம் தேதி முதல் பசுவின் சிறுநீரான கோமியத்தை லிட்டர் 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

வரும் 28ம் தேதி மாநிலத்தில் நடக்கும் ஹரேலி பண்டிகையின்போது, இந்த திட்டத்தை சத்தீஸ்கர் அரசு தொடங்குகிறது.

பணவீக்கம், சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஏற்கெனவே சத்தீஸ்கர் அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோதன் நியாய் யோஜனா எனும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பசுவின் சாணத்தைக் கொள்முதல் செய்து கால் நடை வளர்ப்போருக்கு வருமானம் அளித்தது. இந்த சாணத்தை இயற்கை உரமாக மாற்றி, கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டது.

அதிகாரிகல் தரப்பில் கூறுகையில் “ முதல்கட்டமாக பசுவின் கோமியத்தை மாவட்டத்தில் உள்ள இரு சுய பசு பாதுகாப்பு மையத்தின் மூலம் நடக்கும். பசு மேலாண்மை குழுவினர், பசுவின் கோமியத்துக்கான விலையைத் தீர்மானிப்பார்கள். ஆனால், விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள், கால்நடை வளர்ப்போர் கோமியத்துக்கு லிட்டர் ரூ.4 வரை தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்

உள்ளாடையை கழற்றியே ஆகணும்.. நீட் தேர்வில் சர்ச்சை - மாணவி பரபரப்பு புகார் !

பசு நியாய் திட்டத்தின் இயக்குநர் ஆயாஸ் தம்போலி பிறப்பித்த உத்தரவில் “ ஹரேலி பண்டிகைக்கு தேவையான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும்

இரு தனியார் பசுபாதுகாப்பு மையத்தை அடையாளம் காண வேண்டியது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாகும். இதற்குரிய மகளிர் சுய உதவிக் குழுவினரையும் அடையாளம் காண வேண்டும். கொள்முதல் செய்யப்படும்பசுவின் கோமியம், பூச்சி கொல்லியாகவும், உரத்துக்காகவும் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்

ஏற்கெனவே சத்தீஸ்கர் அரசு பசுவின் சாணத்தை கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்துவருகிறது. கொள்முதல் செய்யப்படும் சாணம் உலரவைக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றப்பட்டு விற்கப்படுகிறது. அந்த வகையில் 2 ஆண்டுகளில் ரூ.150 கோடிக்கு சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை... மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி!!

இதுவரை 20 லட்சம் குவிண்டால் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.143 கோடி வருவாய் கிடைத்துள்ளது.