ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் தலைமை நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ்  தொற்றால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உள்பட, உயர் பதவியில் உள்ளோர் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர் ஏ.கே.திரிபாதி (62). இவர் சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிவர்.

கடந்த மாதம் ஏப்ரல் 2ம் தேதி இவரது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சையில் பிரிவில் இருந்து வந்த நிலையில் இன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு நீதிபதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சக லோக்பால் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.