சூப்பர் அறிவிப்பு ! கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி அதிரடியாக விலை குறைப்பு !
கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைக்கப்படுவதாக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குனர் சுசித்ரா கூறியுள்ளார்.
பூஸ்டர் டோஸ் :
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன்படி 2-வது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியானது நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தடுப்பூசி விலை குறைப்பு :
இந்நிலையில், தனியார் மருத்துமனைகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ரூ.225 ஆக குறைத்து சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனையின்படி தனியார் மருத்துமனைகளுக்கான தடுப்பூசியின் விலை ரூ.600-ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைக்கப்படுவதாக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குனர் சுசித்ரா கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் விலை ரூ.1,200ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். எனவே, நாளை முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ரூ.225 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.