கேரளாவில் அதிகரித்த கொரோனா.. நேற்று ஒரே நாளில் 3 பேர் மரணம் - சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல்!
Kerala Covid 19 Cases Increased : கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்படி, நேற்று டிசம்பர் 20ம் தேதி அன்று கேரளாவில் 300 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன என்ற அதிர்ச்சி தரும் தகவலை அளித்துள்ளது மேலும் நமது இந்திய நாட்டில் கோவிட் -19ன் செயலில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 2,669 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், கேரளாவைச் சேர்ந்த சுகாதார நிபுணர் ஒருவர் புதன்கிழமை இதுகுறித்து கூறியதாவது, "கொரோனா என்பதும் மற்ற தொற்று நோயைப் போன்றது தான், அதை முழுமையாக அழிக்க முடியாது, அதே நேரம் நோயின் தாக்க விகிதம் குறைந்துள்ளது என்றார் அவர்.
"கோவிட் என்பது மற்ற தொற்று நோயைப் போலவே முற்றிலும் அழிக்க முடியாதது. இருப்பினும், நோயின் வீரியம் குறைந்துவிட்டது, மேலும் நோய்க்கு உள்ளானவரகளின் இறப்பு விகிதம் முன்பு இருந்ததைப் போல அதிகமாக இல்லை. இது இப்போது மற்ற காய்ச்சல் அல்லது வேறு எந்த ஜலதோஷத்தைப் போலவே உள்ளது," என்று டாக்டர் ஸ்ரீஜித் என் குமார் கூறினார்.
இதற்கிடையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சில மாநிலங்களில் கோவிட்-19 வழக்குகளின் சமீபத்திய அதிகரிப்பு காரணமாக, நேற்று புதன்கிழமை இந்தியாவில் கோவிட்-19 நிலைமை மற்றும் கோவிட்-19 கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதார அமைப்பின் தயார்நிலை ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்த சந்திப்பின் போது, கோவிட்-19 வைரஸின் புதிய மற்றும் வளர்ந்து வரும் விகாரங்களுக்கு எதிராக எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை திரு. மாண்டவியா வலியுறுத்தினார். "COVID-19 வைரஸின் புதிய மற்றும் வளர்ந்து வரும் விகாரங்களுக்கு எதிராக எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருப்பது முக்கியம்" என்று. திரு மாண்டவியா கூறினார்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்.. உலக அளவில் முடங்கிய X தளம் - என்ன ஆச்சு? தவிக்கும் யூசர்ஸ்!
அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சென்ட்ரேட்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதிசெய்யவும் மத்திய சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டார். கோவிட்-19ஐ திறம்பட நிர்வகிப்பதை உறுதிசெய்ய மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே கூட்டு முயற்சிகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய திரு மாண்டவியா, "மத்திய மற்றும் மாநில அளவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதிரி பயிற்சிகளை மேற்கொள்வோம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வோம்" என்றார். விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொற்றுநோயை நிர்வகிக்கவும், உண்மையாக சரியான தகவல்களைப் பரப்புவதை உறுதிப்படுத்தவும் மாநிலங்களை அவர் வலியுறுத்தினார்.