ஈஷா-விற்கு எதிரான அவதூறு செய்தி கட்டுரையை முடக்க VICE மீடியா குழுமத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் VICE மீடியா LLC-ல் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அவதூறாக வெளிவந்த ஆன்லைன் செய்தி கட்டுரையின் URL-ஐ முடக்குமாறு விஜயவாட்டா 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று, விஜயவாடா 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா LLC-ன் மூத்த நிருபர் பல்லவி பண்டிர் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய அவதூறான ஆன்லைன் செய்தி கட்டுரையின் URL-ஐ, அடுத்த உத்தரவு வரும் வரை முடக்கி வைக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கை வருகின்ற 23 செப்டம்பர், 2022 அன்று நீதிமன்றம் விசாரிக்கும்.
ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குரு மீது தவறான, ஜோடிக்கப்பட்ட, பொய்யான மற்றும் சரிபார்க்கப்படாத பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாக வெளியிட்ட VICE ஊடக குழுவிற்கும் அதன் மூத்த நிருபருக்கும் எதிராக ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா அவுட்ரீச் செப்டம்பர் 1 அன்று அவதூறு வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு 'சிறந்த FPO' விருது..! கடந்த ஆண்டு ரூ.17 கோடி Turn over செய்து சாதனை
ஜூன் 23 தேதியிட்ட செய்தி, தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளால் நிறைந்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை வாதிட்டது. உண்மையை அணுகுவதற்கான நேர்மையான முயற்சி எதுவும் இல்லை. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் ஆர்.டி.ஐ.களின் அதிகாரபூர்வ பதில்கள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பொதுத்தளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறையின் ஆவணங்கள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் ஈஷா அறக்கட்டளை வழங்கியது.
பல்லவி பண்டிர் மற்றும் வைஸ் மீடியா எல்.எல்.சி.க்கு ஈஷா சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, வெளியிடப்பட்ட கட்டுரையை முழுவதுமாக திரும்பப் பெறவும், இதுபோன்ற பொய்யான அறிக்கைகளையும், அப்பட்டமான தவறான தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தவும் மற்றும் தவறான தகவலை வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க - 25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி - பி.எஸ்.என்.எல்லின் தவறான கட்டண விதிப்பு! நீதி நிலைநாட்டப்படும் என ஈஷா நம்பிக்கை
ஈஷா அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ் க்கு வைஸ் (VICE) ஊடகத்தினரிடம் இருந்து முறையான பதில் ஏதும் வராததால், பத்திரிகை என்ற பெயரில் செய்தியாளர் மற்றும் வைஸ் மீடியா குழு பத்திரிகை நெறிமுறைகளை தவறியதையும் தவறான தகவல்கள் அளிப்பதையும் அதன் வாசகர்களுக்கு அம்பலப்படுத்த, ஈஷா அறக்கட்டளை நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.