Asianet News TamilAsianet News Tamil

சந்தா கோச்சார், தீபக் கோச்சாரை விடுவிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை காவலில் இருந்து விடுவிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court allows release of Chanda Kochhar and Deepak Kochhar from judicial custody
Author
First Published Jan 9, 2023, 11:28 AM IST

கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் இருவரும் சிபிஐ அதிகாரிகளால் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை காவலில் இருந்து விடுவிக்க என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் கைது செய்யப்பட்டது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏற்கெனவே, 2022ஆம் ஆண்டில் இந்த மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சாந்தா கோச்சாரை கைது செய்து, பின் ஜாமீனில் விடுதலை செய்துவிட்டது.

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதி வாடகை உயர்வு: பாஜக கண்டனம்

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சாந்தா கோச்சார் செயல்பட்டு வந்தார். அவருடைய பதவிக் காலத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.

அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த  நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும், வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டது.

உலக கார் விற்பனையில் மூன்றாம் இடத்தில் இந்தியா... முதலிடத்தை பிடித்தது எந்த நாடு தெரியுமா?

இதுதொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தா கோச்சார் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 2020ம் ஆண்டு சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சாருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios