ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க ஆம் ஆத்மி சஞ்சய் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி!

ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

Court allows Aam aadmi party Sanjay Singh to take oath as Rajya Sabha MP smp

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவரது நீதிமன்றக் காவல் வருகிற 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடுவடைந்த நிலையில், தீர்ப்பை தேர்தி குறிப்பிடாமல் டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இதனிடையே, ராஜ்யசபா உறுப்பினராக சஞ்சய் சிங்கின் பதவிக்காலம் ஜனவரி 27ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக அவரை மீண்டும் ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக பிப்ரவரி 5ஆம் தேதி (நாளை ) பதவியேற்பதற்கு, இடைக்கால ஜாமீன் கோரி சஞய் சிங் தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையின் போது, ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்கவும், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள கோரியும் சஞய் சிங்கின் வழக்கறிஞர் வாய்மொழியாக முறையிட்டார். இதற்கு அமலாக்கத்துறை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கிற்கு அனுமதி அளித்த நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி, செல்போன் பயன்படுத்தக் கூடாது, வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பார்க்கக் கூடாது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவரது குடும்பத்தினரை, வழக்கறிஞர்களை சந்தித்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவருக்கு அனுப்பப்பட்ட 5 சம்மன்களையும் அவர் நிராகரித்துள்ளார். இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios