ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வெங்கடலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளது. சதீஷ் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்குமே உடல் நிலை பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே வாழ்ந்து வந்துள்ளனர்.

சதீஷிற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அவர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து இன்று காலையில் வீட்டிற்கு வெளியே இருந்த காலி இடத்தில் இருவரும் தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டனர். எனினும் அவர்களுக்கு கொரோனா குறித்து எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை.

கொரோனா பாதித்துள்ளதாக நினைத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தம்பதி தீக்குளித்து தற்கொலை...!

அதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அவர்களின் வீட்டை சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்டதுஎன்றும் வேறு வழியில்லாது தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.