பா.ஜனதா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வெங்கையா நாயுடு மற்றும் அவரின் குடும்பத்தினர் நில மோசடி மற்றும் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள வெங்கையா நாயுடு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி அரசியல் பழிவாங்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ந்தேதி நடக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது-

2017ம் ஆண்டு ஜூலை 20ந் தேதி தெலங்கானா அரசு ரகசியமாக ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில் வெங்கையா நாயுடுவின் மகள் நடத்தும், ஸ்வர்ன பாரத் டிரஸ்ட்என்ற தொண்டு நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அளவிலான மேம்பாட்டுக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

அதுமட்டுமல்லாமல் 2014ம் ஆண்டு, தெலங்கானா அரசு ரூ. 271 கோடி அளவுக்குடெண்டர் வௌியிட்டது. ஆனால், யாருக்கும் அழைப்பு விடுக்காமல் டெண்டல்கொடுக்கப்பட்டது. இதில் ரூ. 271 கோடிக்கு ‘ஹர்சா டொயாட்டா’, ‘ஹிமான்சுமோட்டார்ஸ்’ ஆகிய இரு கார் டீலர்களிடம் இருந்து கார்கள் வாங்கப்பட்டன. இதில்ஹர்சா என்பது வெங்கையா நாயுடுவின் மகன் நடத்தும் நிறுவனம், மற்றொன்றுதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனுடையது.

மேலும்,கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘குஷாபாகு தாக்ரே மெமோரியல் டிரஸ்ட்’ க்கு ஒதுக்கப்பட்ட, 20 ஏக்கர் நிலத்தை ரத்து செய்தது. இந்த டிரஸ்டின் தலைவராக இருப்பவரே வெங்கையா நாயுடுதான்.

இதில் நெல்லூர் மாவட்டத்தில் ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வெங்கையா நாயுடு ஆக்கிரமித்ததால் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்பின் மக்களின் போராட்டத்தக்கு பின் அதை அவர் திருப்பி அளித்தார்.

வெங்கையா நாயுடு மிகவும் மூத்த அரசியல்வாதி,  அனுபவம் மிக்கவர், துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர். ஆதலால் இந்த குற்றச்சாட்டுக்கு நாட்டுக்கு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் பதில் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு மறுப்பு.....

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை பா.ஜனதா துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வௌியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நான் மத்திய அமைச்சராக இருந்தவரை இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் ஏதும் என் மீது சுமத்தப்படவில்லை. இப்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது, அரசியல் ரீதியாகவும் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே இதற்கு முந்தைய காலங்களல் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதிலும்,துணைஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் என் மீது இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி சுமத்துவது, அரசியல் ரீதியாகவும், களங்கம் கற்பிக்கும் எண்ணத்துடன் கூறுகிறது என்பது தௌிவாகத் தெரிகிறது.

இது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையற்ற தன்மையையும், அரசியல்ரீதியாக திவாலாகிவிட்டதையும் காட்டுகிறது.  இதுபோன்ற தரம்தாழ்ந்து காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுவதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.